Wednesday, December 31, 2008

மதுரை: திருமங்கலம் தொகுதியில் பல தவறுகள் நடப்பது கவலையளிக்கிறது. பிரச்சனைக்குரிய ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக தேர்தலை நடத்தியுள்ளது. ஆனால் திருமங்கலத்தில் கறை படிந்துள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.திருமங்கலம் இடைத் தேர்தல் வன்முறையைத் தொடர்ந்து மதுரை வந்தார் நரேஷ்குப்தா. தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மிரட்டல்-தாக்குதல்-விதிமீறல்திருமங்கலம் தொகுதியில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. மிரட்டுதல், தாக்குதல், விதிமுறை மீறல், வாகனங்களை சேதப்படுத்துதல் என பல வன்முறைகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்படும்.
GA_googleFillSlot("tamil-article-468x60");
ctxt_ad_width = 468;
ctxt_ad_height = 60;
ctxt_ad_market = 'in';
ctxt_ad_url = 'http://www.oneindia.in/';
ctxt_ad_interface = 'http://cm.in.oneindia.overture.com/js_1_0/';
ctxt_ad_config = '6012084620';
ctxt_ad_source = 'oneindia_in_ctxt';
ctxt_ad_url_cat = 'default_1';
ctxt_ad_newwin = 1;
ctxt_ad_id_rotate=['pa_001_hin','pa_015_in','matrimony','travel'];
ctxt_ad_keywords_rotate=['shop','travel','sports','jobs','goa','tourism','hotels'];
ctxt_ad_bc = 'FFFFFF';
ctxt_ad_newwin = 1;
பொதுவாக வாகனங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், திருமங்கலத்தில் நிறைய வாகனங்கள் அனுமதியில்லாமல் இயக்கப்படுகின்றன.இது அறியாமையால் வந்ததா என்று தெரியவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு தற்போது வாகன அனுமதிக்காக பாஸ் பெற பலர் விண்ணப்பித்துள்ளனர்.கல்யாண மண்டபங்களுக்கு சீல்?திருமண மண்டபங்களில் பணப்பட்டுவாடா மற்றும் சாப்பாடு போடப்பட்டுள்ளது குறித்து புகார் வந்துள்ளது. அந்த மண்டபங்களை சீல் வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே இந்தத் தேர்தலுக்காக ஒரு பார்வையாளர் வந்துள்ளார். மேலும் ஒருவர் வர உள்ளார். ஜனவரி 2-ம் தேதி மத்திய துணைத் தேர்தல் ஆணையரும் வருகை தர உள்ளார்.கறை படிந்துள்ளதுதிருமங்கலம் தொகுதியில் பல தவறுகள் நடப்பது கவலையளிக்கிறது. பிரச் சனைக்குரிய ஜம்மு - காஷ் மீர் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக தேர்தலை நடத்தியுள்ளது. ஆனால் திருமங்கலத்தில் கறை படிந்துள்ளது.ஆகவே ஒவ்வொருவரும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் பொய்யல்ல. ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும். தேர்தலை நியாயமாக நடத்தாவிட்டால் ஜனநா யகத்திற்கே ஆபத்தாகும்.ஏற்கெனவே மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் நடைபெற்ற சம்ப வங்களை கண்காணிப்பதற்கு துணைத் தேர்தல் ஆணையர் வந்தார். மதுரை மேற்குத் தொகுதிக்கு நான் வந்தேன்.மேற்குத் தொகுதியைப் போன்ற சிக்கல்அப்போது தேர்தலை ஆணையம் தேர்தல் நிறுத்தலாமா என யோசித்தது. இந்த அறிவிப்பால் அரசியல் கட்சிகள் அடக்கி வாசித்தன. இப்போது அதே போன்ற சிக்கல் வந்துள்ளது.தேர்தல் சம்பவங்கள் குறித்து நான் மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளேன். துணைத் தேர்தல் ஆணையரும் அறிக்கை அனுப்புவார். மத்திய துணை ராணுவம் தேவையா இல்லையா என அவர்தான் முடிவு செய்வார்.திருமங்கலத்தில் நடை பெறும் அனைத்து சம்பவங் களும் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கெனவே தெரியும். வாக்காளர்களை மிரட் டுதல், பணப்பட்டுவாடா குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார் அவர்.ஐ.ஜி. முறையாக செயல்பட வேண்டும்திமுக, அதிமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், கைது நடவடிக்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த குப்தா, காவல்துறை அதிகாரிகளிடம் கூடுதலாக ஆலோசித்தேன்.தென் மண்டல ஐ.ஜி. இதில் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும். அவர் முறையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.நரேஷ்குப்தாவின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீத்தாராமன், தென் மண்டல ஐ.ஜி. சஞ்சீவ்குமார், சரக டிஐஜி கிருஷ்ணமூர்த்தி, மதுரை புறநகர் காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன், தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன், உதவி அலுவலர் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நரேஷ் குப்தாவிடம் வைகோ, ஓ.பி. புகார்இந்த நிலையில், திருமங்கலத்தில் எதிர்க்கட்சியினர் கடுமையாக தாக்கப்படுவது குறித்து, நரேஷ் குப்தாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மோகன் எம்.பி., சிபிஐ மாவட்டச் செயலாளர் காளிதாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து புகார்மனு அளித்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திருமங்கலம் தொகுதியில் திமுக கடும் வன்முறையை ஏவியுள்ளது. கடந்த 28ம் தேதி அவர்கள் நடத்திய வன்முறையால் அதிமுகவினரின் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. பலர் படுகாயமடைந்தனர்.அதன்பிறகாவது வன்முறையை தடுத்து நிறுத்த தவறிய காவல்துறை, அந்த வன்முறையாளர்களுக்கே பாதுகாப்பு அளிக்கிறது.எலியார்பத்தியில் மு.க.அழகிரி தூண்டுதலின்பேரில் 200க்கும் மேற் பட்டோர் நடிகர் ராமராஜனை தாக்கினர். அவர் நூலிழையில் உயிர்தப்பினார்.

No comments:

Post a Comment