Friday, January 2, 2009

உணவில் கவனம் தேவை நண்பர்களே

நம்மில் சிலர் சாப்பாட்டை எதோ வேண்டா வெறுப்பாக சாப்பிடுகின்றனர் ...நண்பர்களே சாப்பாட்டை ருசித்து ரசித்து சாப்பிடுங்கள் ....


அலுவலகம், நிறுவனங்களில் பணி புரியும் பெரும்பாலானவர்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் மதிய உணவை முறைப்படி உட்கொள்ளாமல் ஒப்புக்கு ஏதோ சாப்பிடுகின்றனர்.

மதிய உணவை ஒரு பொருட்டாகவே பலர் மதிப்பதில்லை. ஆனால் அதில் போதிய கவனம் செலுத்தி, ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காற்கறி, கீரைகள், பழங்கள், தானியங்கள் நிறைந்ததாக மதிய உணவு இருக்கலாம்.

கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சேர்க்காமல், குறைந்த அளவில் சேர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது.

தினமும் ஒரே மாதிரி உணவையே சாப்பிடாமல் மாறுபட்ட, வித்தியாசமான உணவு வகைகளை மதிய நேரத்தில் சாப்பிடலாம்.அலுவலகத்தில் உணவை பகிர்ந்து சாப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதே நேரம் உணவை பிறரிடம் இருந்து எடுப்பதிலோ, கொடுப்பதிலோ சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

உணவுகளை பகிர்ந்து கொள்ளும் போது கரண்டி, ஸ்பூன்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையை பயன்படுத்துவது கூடாது.

No comments:

Post a Comment