Thursday, January 8, 2009

அடங்கா பாண்டிங்-- அடக்கமான ஸ்மித் உங்கள் ஒட்டு யாருக்கு?

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா தொடரில் கடைசி டெஸ்ட் எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே ...அப்படியா ஆம் எல்லா ரசிகர்களின் ஆசைகளும் தென் ஆப்பிரிக்கா வெல்ல வேண்டும் என்று ....

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா வென்றுஇருந்தால் அந்த அணி தர வரிசையில் முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்திருக்கும் ....ஏமாற்றமே... இருந்தாலும் பரவா இல்லை அந்த நாள் வெகு தொலைவில் இல்லை ... ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அவர்கள் குரங்கு சேட்டையை எதிரணி மட்டையாளரிடம் காட்டி வெற்றி பெற்றது ..இனி அவர்கள் பாச்சா பலிக்காது .... ஆஸ்திரேலியா அணி மீண்டும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் அணி போல் ஆகாமல் பார்த்து கொள்ள அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் ,,,
சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது...ஆட்டத்தில் நான்காம் நாள் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விரைவாக முடித்து கொண்டது ...இது பலருக்கு அதிர்ச்சி ,,,அன்றைய பத்திரிக்கைகளில் பாண்டிங் தைரியமாக டிக்ளர் செய்தார் என்று ...

ஆனால் ஒரு வேளை தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் காயம் அடையாமல் இருந்து இருந்தால் அவர்தைரியமாக டிக்ளர் செய்து இருப்பாரா ? ஒரு வேளை செய்து இருப்பார் ,,தன் சகாக்களின் (குரங்குகளின் ) துணையோடு எதிரணி மட்டையாளரை அசிங்கமாக திட்டுவது ...இது அவர்களுக்கு புதிதல்ல சென்ற ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போதும் அரங்கேறியது ...
சிட்னி டெஸ்டின் கடைசி நாளன்று தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் நடுவரின் உதவியுடன் விழுத்த வண்ணம் இருந்தன..ஆஸ்திரேலிய மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் மட்டும் நடுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு சொல்கின்றனர் ..அது ஏன் என்று எனக்கு புரிய வில்லை ,,விக்கெட்டுகள் விழுந்தாலும் தென் ஆப்பிரிக்கா டெஸ்டை சமன் செய்ய போராடியது ..
யாருமே எதிர் பார்க்காத ஓன்று ,,,,ஆம் தென் ஆப்பிரிக்கா அணித்தலைவர் ஸ்மித் மட்டை பிடிக்க வந்தது..ஸ்மித் உள்ளே நுழையும் போது பார்வையாளர்கள் பெரும்பாலோர் எழுந்து நின்று கை தட்டினார்கள் ,,,(பார்வையாளர்களுக்கு நன்றி ),,எப்படியாவது ஆட்டத்தை சமன் செய்து விட வேண்டும் என்று ,,அட அணி தலைவருக்கே உரிய மிகப்பெரும் பொறுப்பு ..
சபாஷ் ஸ்மித் ,,, இருந்தாலும் அவரால் தோல்வியை தடுக்க முடிய வில்லை ,,வருத்தம் தாங்க முடிய வில்லை அவருக்கு ...ஆமாங்க அணித்தலைவர் அவர் .சிறந்த தலைவரும் கூட .. ஆஸ்திரேலிய அணியோ புத்தாண்டின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ,,,,ஆனாலும் தொடரை சொந்த மண்ணில் இழந்ததே....தொடரை வென்ற தென் ஆப்பிக்க அணிக்கு நமது பாராட்டுக்கள்.....

No comments:

Post a Comment