Friday, April 3, 2009

உங்கள் ஆதரவு கேப்டனுக்கே


உங்கள் ஆதரவு கேப்டனுக்கே:


இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளது.ஆனால் சில மாநிலங்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் பின் தங்கியும் உள்ளது.ஆனால் தமிழகம் கல்வியிலும் வறுமையிலும் பரவாயில்லை .தமிழகத்தில் பயின்று இன்று பல இளைஞர்கள் வேறு மாநிலங்களிலும் ,வெளிநாட்டிலும் திறம் பட வேலை செய்து வருகின்றனர்.இதெற்கெல்லாம் ஆணிவேர் தமிழகத்தில் கல்வி நல்ல முறையில் கற்று தரப்படுகிறது .கல்வியோடு ஒழுக்கமும் கற்று தரப்படுகிறது.இதெற்கெல்லாம் காரணம் அன்றைய உண்மையான அரசியல்வாதிகளான பேரறிஞர் அண்ணாத்துரை ,பெருந்தலைவர் காமராஜர் ,மற்றும் மக்கள் தலைவர் எம் .ஜி.ஆர் ,இவர்களால் தான் தமிழகம் ஓரளவுக்கு பரவாஇல்லை ,,ஆனால் இவர்கள் மறைவுக்குபின் இவர்கள் அரும்பாடு பட்டு உழைத்து மக்களுக்கு சேவை செய்து நடத்தி வந்த கட்சிகள் பின்னாளில் சேரக்கூடாத சிலரிடம் போயி சேர்ந்தது.


தி.மு.க : >
பேரறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க வின் இன்றைய தலைவர்
குடும்ப அரசியல் நடத்தி தமிழகத்தை ஆளும் போதெல்லாம் தமிழக மக்களை இலவசம் என்ற பெயரில் சில பொருள்களை கொடுத்து (கலர் டிவி ,அடுப்பு ,ஒரு ரூபாய் அரிசி )மக்களை தங்களுக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர் ,,ஆனாலும் ஒரு ரூபாய் அரிசி திட்டம் இருக்கிறதே அது உட்கட்சிகாரர்களுக்கு அரிசி கடத்த ஏதுவான திட்டம் ..பாவம் ஏழை மக்களுக்கு என்ன தெரியபோகிறது ,,இந்த அரசு மக்களுக்கு பிச்சை போடுகிறதா ,,மக்கள் உழைக்க தயாராக இருக்கிறார்கள் ,,அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி அந்த குடும்பத்தின் வறுமையை நிரந்தரமாக போக்க முடியாத அரசு அவர்களுக்கு இலவசம் என்ற பெயரில் எதையாவது கொடுத்து அடிமை ஆக்கி கொள்கின்றனர் ..
எழுந்து நடப்பதெற்கே நாலு பேர் கைதாங்கலாக பிடிக்க வேண்டும் இப்படி ஒரு தலைவர் ,அவருக்கு பதவிமேல் அப்படி ஒரு ஆசை..இது தான் இன்றைய தி.மு.க .

அ.தி.மு.க :
மக்கள் தலைவர் எம் .ஜி .ஆர் ஆரம்பித்த கட்சி இன்று ஒரு பெண்ணிடம் ஆனால் இங்கு குடும்ப அரசியல் இல்லை ,,ஆட்சியில் இருக்கும் போது மக்களை கண்டு கொள்வதே கிடையாது ,ஆட்சி முடியும் போது மக்களிடம் போய் வாய்க்கிழிய பேசுவது.தொண்டர்கள் இவரை அம்மா என்று தான் அழைப்பார்கள்,,எந்த விதத்தில் அம்மா ஆனார் அந்த பெண் என்று தெரியவில்லை .ஆனால் இங்கு எடுக்கப்படும் முடிவுகள் நன்மையோ ,தீமையோ தைரியமாக எடுக்கப்படும்.சொல்லிகொள்ளும்படி பெரிதாக எதுவும் ஆட்சிகாலத்தில் செய்தது கிடையாது .எம் .ஜி .ஆர் .பெயரை சொல்லி இன்றும் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் .

தே.மு.தி.க :தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆண்டு வரும் கட்சிகள் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லை,தேர்தல் நேரத்தில் யாராவது தன்னிடம் பிச்சை கேட்டு வரமாட்டார்களா என்று எதிர் பார்த்து கொண்டிருக்கின்றன .ஆனால் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது.விஜயகாந்த் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியலுக்கு வரவில்லை .மக்களுக்கு தன்னால் முடிந்தவரையில் நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான்.மக்கள் இவரை ஆட்சி பீடத்தில் ஒருமுறை வைத்துதான் பாருங்களேன் ,,இது பாராளுமன்ற தேர்தல் தானே என்று நீங்கள் நினைக்கலாம் ,இந்த தேர்தலில் ஒரு ஐந்து அல்லது பத்து சீட் வெற்றி பெற செய்யுங்கள் .அவரால் அந்த M.P க்களை கொண்டு தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று தான் பார்ப்போமே ,,ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் நமக்கு தேவையான முதல்வர் நமது கையில் .இல்லையென்றால் அவருக்கு தகுதி இல்லை என்று ஓரம் கட்டி விடலாம் ...இல்லையென்றால் அவர் நாய்களோடும் நரிகளோடும் கூட்டணி வைத்து கொள்ள நாமே காரணம் ஆகலாம் .,ஆனால் ஒன்று ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமலேயே அவரால் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம்,
தே.மு.தி.க விடம் உழைப்பு உள்ளது ,நம்மிடம் ஓட்டு உள்ளது ...உழைக்க தயாராக உள்ளவரிடம் உங்கள் ஓட்டு போய் சேரட்டும். வாழ்க தமிழகம் ..வளர்க தமிழன் ...

Wednesday, January 28, 2009

நான் கடவுள் தயார்--- பிப்ரவரி 6

துவக்கம்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு இருக்குமல்லவா? நான் கடவுள் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டாங்களாம். பிப்ரவரி ஆறாம் தேதி மக்களை சந்திக்க வருகிறார் கடவுள்.

சென்சார் சர்டிபிகேட் வாங்கிய பிறகும் படத்தை செதுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள் இளையராஜாவும், பாலாவும். ஆடியோ வெளியான பிறகும் கூட 'இந்த இடத்திலே ஒரு பாடலை வச்சுக்கலாமே' என்று மேலும் ஒரு பாடலை போட்டு கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்தளவுக்கு படத்தோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள் இருவரும்.

எந்த படத்திற்கும் இத்தனை நாட்கள் பின்னணி இசைக்காக எடுத்துக் கொண்டதில்லையாம் இளையராஜா. இந்த படத்திற்காக அதையும் செய்திருக்கிறார். இரண்டு க்ளைமாக்ஸ்கள் எடுக்கப்பட்டு அதில் எதை சேர்ப்பது? எதை விடுப்பது என்ற குழப்பத்திலிருந்த பாலா, அதிலும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். நாம் பார்க்கப் போவது வில்லனை அடித்து புரட்டி கடைசியில் அவனையே மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடும் 'அகோரி' என்கிற அசுரத் தனத்தைதான்! இரண்டு க்ளைமாக்சுகளுக்கும் சென்சார் சர்டிபிகேட் வாங்கி வைத்திருக்கிறாராம் பாலா.

ரிலீஸ் தேதியான ஆறு, தமிழ்சினிமாவுக்கே ஆறுதல் தரும்படி இருக்க வேண்டும்

இந்தியா அசத்தல் வெற்றி - கம்பீர், ரெய்னா, டோணி அரைசதம்

தம்புலா: தம்புலாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. கம்பீர், ரெய்னா, டோணி பொறுப்பாக பேட் செய்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டொன்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது.

முதல் போட்டி தம்புலாவில் இன்று நடந்தது. கேப்டன் டோணி டாஸ் வென்றார். இதையடுத்து பீல்டிங்கை அவர் தேர்வு செய்தார். இப்போட்டியில் காயம் காரணமாக ஷேவாக் இடம் பெறவில்லை.

ஜெயசூர்யா சாதனை...

இலங்கை அணிக்கு துவக்க வீரர் வந்த ஜெயசூர்யா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 37வது ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டிகளில் சச்சினுக்கு அடுத்து 13,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார்.

மேலும் ஒரு நாள் போட்டியில் 28வது சதத்தையும் அவர் எடுத்தார். இதன்முலம் அதிக வயதில் ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற பாய்காட்டின் சாதனைய அவர் முறியடித்தார்.

பாய்காட் 39 ஆண்டு 51 நாட்கள் என்ற வயதில் இருந்தபோது சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இப்போது அதை ஜெயசூர்யா முறியடித்துள்ளார். அவருக்கு இப்போது வயது 39 ஆண்டுகள் 212 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் சேர்த்து ஜெயசூர்யா அவுட் ஆனார். சங்ககரா 44, மகருப் 35 ரன்கள் சேர்த்தனர். இலங்கை முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜாகிர்கான், ஓஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கரும், கம்பீரும் இறங்கினர்.

இதில் சச்சின் 5 ரன்கள் எடுத்தபோது மிராண்டா பந்தில் ஆட்டமிழந்தார். சூப்பராக விளையாடிய கம்பீர் அரைசதம் கடந்தார். இவர் 68 பந்தில் 62 ரன்கள் எடுத்து முரளிதரன் பந்தில் அவுட்டானார். 1 சிக்சர், 3 பவுண்டரி அடித்து அதிரடியாக விளையாடிய ரெய்னா 53 ரன்களுக்கு ரன்-அவுட் ஆனார்.

அடுத்து வந்த யுவராஜ் 23 ரன்களுக்கு வெளியேறினார். கேப்டன் டோணி 61, ரோகித் சர்மா 25 ரன்கள் எடுத்து, அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி 48.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அருமையாக ஆடி சதம் போட்ட ஜெயசூர்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Monday, January 26, 2009

ஆஸ்திரேலியா தொடரை இழந்தது .....வெட்கம் மானம் ,,,

இன்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது .....இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் மட்டை பிடித்தது. அவர்களின் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சிற்கு எதிராக ஒன்றும் முடிய வில்லை ,,பாவம்,, அணி தலைவர் பாண்டிங் மட்டும் சமாளித்து ஆடினார்.மற்ற வீரர்கள் அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை ,,,வெறும் 222 ஓட்டம் மட்டுமே எடுத்தது,
விடுவார்களா தென் ஆப்பிரிக்கா அணியினர் ,,,தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு ,,நன்றாக பயன் படுத்தி 40 ஓவர்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினர்....சபாஷ் தென் ஆப்பிரிக்கா .....
ஆஸ்திரேலியா தோற்றது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சந்தோசமாக தான் இருந்திருக்கும் ....ஆம் அவர்கள் தர வரிசையில் கீழ் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ,,இதுவரை ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா ,,தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ...
இந்தியாவின் ஆதிக்கம் மேல் ஓங்க தொடக்கி இருக்கிறது ..பாண்டிங்கை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது இன்றைய ஆட நேர முடிவில் ... என்ன செய்ய சொந்த மண்ணில் தொடரை இழப்பது எவ்வளவு வேதனை...ம்ம் அனுபவிக்கட்டும் ....

Wednesday, January 21, 2009

ஒரே இரவில் பலரது வாழ்க்கையை -- IT

சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!
'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்படும்!' என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது!
விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.
அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.


''நான் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம் ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..'' என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்கு வேலை இல்லை.
''வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமே கம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது. மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டு இருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு 'இனிமே கம்பெனியை நடத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள் என்னை பிக்கப் பண்ண கார் வரல..
வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல. என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது'' - கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.
வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலை செய்கிற கல்பனா. ''நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சு வேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலை செய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.
கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாது இல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, 'ஸ்டார் பர்ஃபார்மரா' ('பிரமாதமாக வேலை செய்கிறவர்' என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர் மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்'' என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச் சொன்னார்..
''எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியா கெடந்திருக்காங்க ரெண்டு பேரும். 'பேசாம செத்துப் போய்டலாம்போல இருக்கு'னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல.
ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே 'ஜூனியர் மோஸ்ட்' ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு'' என்கிறார் கண்ணீர் மல்க!
கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது.
''எதுவா இருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது'ன்னு ஒரு இ-மெயில் அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ் வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்'' என்றார் ரேவதி.
பெங்களூருவின் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்..
''ஐ.டி. துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன். ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன் இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம் வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..'' என்றவர் நிறுத்தி, ''என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம். பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம் ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம் முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதி கிடைக்கும்!'' என்றார் கலங்கும் கண்களுடன்.
ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்..
''தொண்ணூறுகளின் இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர் மக்கள்.
ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.
சமீபத்தில் 'யுனைட்ஸ்' என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்' என்று அறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது'' என்றவர்,
''இருந்தாலும் '2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்' என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்'' என்றார். இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?
- இரா.வினோத்


'அவள்' அடித்த எச்சரிக்கை மணி!
கடந்த 12.09.08 தேதியிட்ட 'அவள் விகடன்' இதழில், 'கேம்பஸ் இன்டர்வியூ குளறுபடிகள்' என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். 'இந்தியாவில் ஐ.டி என்கிற துறையே இறங்குமுகத்தில் இருக்கிறது' என்பதை முதன் முதலாக நாம் வெளியிட்ட பிறகு, 'பெரும்பாலான கேம்பஸ் இன்டர்வியூக்கள் வெறும் கண் துடைப்புதான்' என்ற உண்மை தமிழகம் எங்கும் வெளிப்படையாகவே பேசப்பட்டது.
இதையடுத்து, கடந்த 05.12.08 தேதியிட்ட இதழில், நமக்கு பேட்டி கொடுத்திருந்தார், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
'ஐ.டி. துறையின் இந்தப் பின்னடைவுகூட நல்லதுக்குத்தான். இனியேனும் உலக நாடுகளுக்கு சேவை செய்யாமல், உலகத் தரத்துக்கு இணையான வர்த்தகச் சேவையை நாமே துவங்கி, நாலா திசையிலும் பரவச் செய்ய வேண்டும்' என்கிற வேண்டுகோளையும் அந்தப் பேட்டியில் முன்வைத்திருந்தார் பாலகுருசாமி.
ஐ.டி நிறுவனங்கள் இன்றைக்கு மனதில் கொள்ள வேண்டிய ஆலோசனை இது!இரக்கம் இல்லாத இ-மெயில்!
ஒரு ஐ.டி நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலில் இருந்த வரிகள் இவை.. 'வடை, அப்பளம், காய்கறி, பழங்களை உணவில் குறைத்தால் மாதம் 5 லட்ச ரூபாய் சேமிக்க முடியும். வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் சேமிப்பு. அதனால், நாளை முதல் உணவில் இவை கிடையாது!'''குறையவில்லை மவுசு!''
'கல்யாண சந்தையிலும் ஐ.டி. துறையினரின் மார்க்கெட் இறங்கி இருப்பதாக'க் கேள்விப்பட்டு கல்யாண போர்ட்டல்கள் நடத்துகிற 'கல்யாண மாலை' மோகன் மற்றும் 'பாரத் மேட்ரிமோனியல்' முருகவேலிடம் கருத்துக் கேட்டோம். அவர்களின் கருத்து வேறாக இருக்கிறது.
''இன்று வரையிலுமே உள்ளூர் ஐ.டி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்குமான மவுசு குறையவே இல்லை. ஆனால், வெளிநாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க ரொம்பவே தயங்குகிறார்கள்..'' என்றார் மோகன்.
இதே கருத்தை வலியுறுத்துகிற முருகவேல், நம் ஊர் ஐ.டி துறை பற்றிய நம்பிக்கையுடனேயே இருக்கிறார்..
''வெளிநாடுகள் அளவுக்கு நம் ஊரில் பாதிப்பு இருக்காது. சம்பளம் குறையலாம்; சலுகைகள் பறிக்கப்படலாம்; வேலை இழப்பும் இருக்கலாம்; ஆனால், ஒட்டு மொத்த ஐ.டி துறையேயெல்லாம் விழுந்து விடாது. அதனால், ஐ.டி துறையில் பணிபுரியும் மணமக்களுக்கான தேவையும் அப்படியேதான் இருக்கும்'' என்பது முருகவேலின் கருத்து!''அமெரிக்காவில் பிரச்னை ஜாஸ்தி!''
திருமணமாகி, அமெரிக்காவில் குடியேறி விட்ட 'மகாநதி' ஷோபனா, சமீபத்தில் சங்கீத சீஸனில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். ''நம் நாட்டிலேயே நிலைமை இப்படி என்றால்.. அமெரிக்காவில் என்ன நிலை?'' என்கிற கேள்வியை முன்வைத்தோம் அவரிடம்..
''அமெரிக்கா ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்குங்கிறது நிஜம்தான். ஒவ்வொரு அமெரிக்கரோட வருமானமும் துணிக் கடை, ரெஸ்டாரன்ட், பொழுதுபோக்கு அம்சங்கள்னு பலதுக்கும் நேரடியா போய்டுற மாதிரியான ஒரு வாழ்க்கை முறை அவங்களோடது. மாச வருமானத்துல எவ்வளவு கிரெடிட் கார்டுக்குக் கட்ட முடியும்ங்கிற அடிப்படையில பொருள்களை வாங்கிக் குவிக்கிறவங்க.
அதனாலதான் இந்தப் பொருளாதார நெருக்கடியை அவங்களால சமாளிக்க முடியல. வாங்கின கடனை வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்த முடியல. வங்கிகள் திவாலாகுது.
நம்ம நாட்டுலயாவது குறைவான சதவிகித மக்களுக்குத்தான் கஷ்டம். அங்க பிரச்னை ஜாஸ்திதான்! ஆனா, ஒபாமா வந்துட்டதால, அவர் எல்லாத்தையும் மாத்திடுவார்னு அவங்க நம்புறாங்க. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு'' என்றார்.
படம்: வி.செந்தில்குமார்''மறைமுக பாதிப்பு!''
''ஐ.டி துறையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு என்பது நேரடியானது. இது தவிர, மறைமுக பாதிப்புகளும் நிறைய இருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களை நம்பி மாதத் தவணையில் கார் வாங்கி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்களும். தவிர, ஜிம்கள், கேடரிங்குகள், ஹவுஸ் கீப்பிங்.. என்று பல வகையான தொழில்களும் ஐ.டி-யால் வளர்ந்தன. இன்று அவைதான் முதல் கட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஐ.டி. துறையினர் ஏற்றி விட்ட ரியல் எஸ்டேட் விலையும் வீட்டு வாடகையும் எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை..'' என்று வருந்துகிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர்.
''கண்ணு முன்னால நிக்குது இ.எம்.ஐ..''
சமீபத்தில் சரிவைச் சந்தித்த 'சத்யம்' நிறுவனம் 'தன் ஊழியர்கள் யாரும் மீடியாக்களிடம் பேச அனுமதி கிடையாது' என்று இ-மெயில் அனுப்பி உள்ளது. இருந்தாலும், அந்த நிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.. தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் இங்கே..
'' 'சத்யம் கம்பெனியை இழுத்து மூடப் போறாங்க. அதுக்குள்ள எல்லாரும் வேற வேலை தேடிக்குங்க'னு சீனியர்ஸ் என்னை நாலு மாசம் முன்னவே எச்சரிச்சாங்க. அவங்களும் வேற கம்பெனிக்கு நல்ல சம்பளத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, அவங்க சொன்னதை நம்பாத நான் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.. இப்ப வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டா, பிப்ரவரி வரைக்கும் ஆட்களை வேலைக்கு எடுக்கிறதில்லைனு சொல்லிட்டாங்க!''
''வேலை இருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமே தெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணு முன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமா இருக்கு!''
ஒரே ஒரு பாஸிடிவ் வாக்குமூலம்..
''நான் தேவையில்லாத எந்த செலவும் செய்யல.. இப்பக்கூட அக்கவுன்ட்ல சில லட்சங்கள் இருக்குறதால நாளையைப் பத்தின பயம் இல்ல எனக்கு. அதோட, இந்தப் பிரச்னை ரொம்பவும் தற்காலிகமானதுனு சொல்றாங்க. மத்திய அரசும் 'போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்' பத்துப் பேரை நியமிச்சிருக்கு. எங்க கம்பெனி சரியாகிடும்னு நம்புறேன்.''

Friday, January 16, 2009

நான் கடவுள்- தணிக்கை துறையின் விமர்சனம் ....

இந்து மதத்திற்கு எதிரான படமா?
நான் கடவுளும், சர்ச்சையும்
இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்...டென்ஷன்... ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!

மீண்டும் இசைஞானியை சந்திக்கிற வரை ஒரு பதற்றம் இருந்ததே பாலாவிடம், அதே பதற்றத்தை ரிலீஸ் நேரத்திலும் இவருக்கு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன சில இந்துத்வா அமைப்புகள். "முஸ்லீம் நடிகரான ஆர்யாவை வைத்து இந்து அமைப்புகளை இழிவு படுத்தி விட்டார் பாலா. சாந்த சொரூபிகளான சாமியார்களை கஞ்சா சாமியார்களாக உருவகப்படுத்தி, அவர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்திருக்கிறார். இது இந்து மதத்தையே இழிவு படுத்துகிற செயல்" இதுதான் இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்களின் குற்றச்சாட்டு.

நான் கடவுள் இந்து மத கருத்துக்களுக்கு எதிரான படமா? என்ற கேள்வியோடு பாலாவை சந்திக்க முயன்றோம். கலர் கரெக்ஷன், பின்னணி இசையை மெருகூட்டுதல் போன்ற வேலைகளில் அவர் பிசியாக இருப்பதால் படத்தில் முக்கிய பணியாற்றிய சிலர் நம்மிடம் பேச முன் வந்தார்கள்.

"எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை ஒரு ஆராய்ச்சி பார்வையோடு விளக்குகிற நாவல் அது. அதில் ருத்ரன் என்ற கேரக்டரை நுழைத்து ஒரு சிவ தாண்டவமே ஆடியிருக்கிறார் பாலா. ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்தாலும், சித்தர்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாலா. இவருக்கு பிடித்த சித்தர் ஒருவர் எழுதிய நூலின் பெயர்தான் 'நான் கடவுள்'. அதைதான் தனது படத்திற்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்"

"கதையையும், திரைக்கதையையும் மட்டுமே பாலா எழுதியிருக்கிறார். வசனம் ஜெயமோகனுடையது. இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்கள் முதலில் ஜெயமோகன் யார் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. எழுத்தாளர்களின் மத்தியில் ஜெயமோகன் ஆர்எஸ்எஸ் அனுதாபி என்ற கருத்து அழுத்தமாகவே இருக்கிறது. அப்படிப்பட்டவர் எப்படி இந்து மதத்திற்கு எதிரான வசனங்களை எழுதுவார்?" என்று எதிர் கேள்வி எழுப்பினார்கள்.

"ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைதான் நான் கடவுள். அது மட்டுமல்ல, ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் சமஸ்கிருதத்தில் 'அஹம் பிரம்மாஸ்மி' என்று சப் டைட்டில் வைத்திருப்பதும் இந்த படத்தில்தான். ஒரு முழு பாடலையும் சமஸ்கிருத மந்திரத்தையே பாடலாக வைத்திருக்கிறார் இசைஞானி. அவரே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்... என்ற ஒரு பக்தி பாடலையும் பாடியிருக்கிறார். இவ்வளவு விஷயங்களும் படத்தை பார்த்தால்தானே தெரியும்? அப்படி பார்ப்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி?" என்றார்கள் ஆவேசமாகவும், வருந்தம் தோய்ந்த குரலிலும்.

படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். "எங்க ஆர் ஓ வுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" என்ற அச்சத்தோடு பேச ஆரம்பித்தார் அவர். "நாங்க எல்லாருமே இந்த படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருந்தோம். இத்தனை நாட்கள் ஆன பிறகும், படம் பார்த்த பிரமிப்பு எங்களை விட்டு போகவே இல்லை. சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம். மற்றபடி எந்த காட்சிகளையும் வெட்டும்படி நிர்பந்திக்கவில்லை" என்றவர், படத்தின் கதையையும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

"காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை" என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

மேலும் அவரது வாயை கிளறியபோது சில தகவல்கள் கிடைத்தன. நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம். "இந்திய சினிமா எதிலும் இடம் பெறாத அபூர்வ காட்சிகள் அவை" என்றார் அவர்.

கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.

ஒவ்வொரு நாளும் பாலாவிடம் அடி, உதை, வாங்கிக் கொண்டு ஒரு தவம் மாதிரி நான் கடவுளை முடித்துக் கொடுத்திருக்கிறார் ஆர்யா. தினமும் மூன்று வேளை தொழுகிற வழக்கம் உள்ள ஆர்யா, இவ்வளவு களேபரத்திற்கும் நடுவிலும் தனது தொழுகையை தொடர்ந்தாராம். இதற்காக அவருக்கு நேரத்தையும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் பாலா.

"அடிப்படையில் ஒரு முஸ்லீமாக இருந்தாலும், மூன்று வருடங்களாக தாடியையும், மீசையையும் வளர்த்துக் கொண்டு, குளிரிலும், பனியிலும் நைந்து தேய்ந்துதான் ஒரு இந்து சாமியாராக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஆர்யா. டீ, காபி குடிக்க வேண்டும் என்றாலும், அவர் தனது மீசை தாடியை ஒதுக்கிக் கொண்டு குடிக்கிற அவஸ்தையை பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும். இந்த படத்திற்காக ஆர்யா இழந்த படங்களும் ஏராளம். அப்படிப்பட்டவரை பாராட்டுவதை விட்டு விட்டு பழி சுமத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்கிறார்கள் பாலாவின் யூனிட்டில்.

படத்தின் தயாரிப்பாளரான சிவஸ்ரீ சீனிவாசனை சந்தித்தோம். "எந்த மதத்தையும் இழிவு படுத்துகிற படம் இல்லை நான் கடவுள். ஆர்யா முஸ்லீம். அவர் எப்படி இந்து சாமியாராக நடிக்கலாம்? என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கு எனது பதில் இதுதான். பிரேம் நசீர் முஸ்லீம்தான். இந்து மதத்தை உயர்த்திப்பிடிக்கும் எத்தனையோ பாத்திரங்களில் அவர் நடிக்கவில்லையா? மதத்தால் முஸ்லீமான குஷ்பு, எத்தனையோ படங்களில் அம்மன் வேடத்தில் நடித்து இந்து மதத்திற்கு பெருமை சேர்க்கவில்லையா? கலைக்கு ஏது மதமும், ஜாதியும்?"

"சென்சார் அமைப்பினர் ஒரே ஒரு முறைதான் படத்தை பார்த்தார்கள். மறு தணிக்கைக்கு வரச் சொல்லவே இல்லை. மனமார எங்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், எவ்வித சிக்கலும் இல்லாமல் அனுமதி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும். படத்தை தயாரித்த எனக்கும் மிகுந்த கடவுள் நம்பிக்கை உண்டு. யாரும் யாரையும் இழிவுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதை ஸ்டிராங்காகவே சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். "என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு...!"

Thursday, January 8, 2009

அடங்கா பாண்டிங்-- அடக்கமான ஸ்மித் உங்கள் ஒட்டு யாருக்கு?

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா தொடரில் கடைசி டெஸ்ட் எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே ...அப்படியா ஆம் எல்லா ரசிகர்களின் ஆசைகளும் தென் ஆப்பிரிக்கா வெல்ல வேண்டும் என்று ....

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா வென்றுஇருந்தால் அந்த அணி தர வரிசையில் முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்திருக்கும் ....ஏமாற்றமே... இருந்தாலும் பரவா இல்லை அந்த நாள் வெகு தொலைவில் இல்லை ... ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அவர்கள் குரங்கு சேட்டையை எதிரணி மட்டையாளரிடம் காட்டி வெற்றி பெற்றது ..இனி அவர்கள் பாச்சா பலிக்காது .... ஆஸ்திரேலியா அணி மீண்டும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் அணி போல் ஆகாமல் பார்த்து கொள்ள அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் ,,,
சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது...ஆட்டத்தில் நான்காம் நாள் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விரைவாக முடித்து கொண்டது ...இது பலருக்கு அதிர்ச்சி ,,,அன்றைய பத்திரிக்கைகளில் பாண்டிங் தைரியமாக டிக்ளர் செய்தார் என்று ...

ஆனால் ஒரு வேளை தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் காயம் அடையாமல் இருந்து இருந்தால் அவர்தைரியமாக டிக்ளர் செய்து இருப்பாரா ? ஒரு வேளை செய்து இருப்பார் ,,தன் சகாக்களின் (குரங்குகளின் ) துணையோடு எதிரணி மட்டையாளரை அசிங்கமாக திட்டுவது ...இது அவர்களுக்கு புதிதல்ல சென்ற ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போதும் அரங்கேறியது ...
சிட்னி டெஸ்டின் கடைசி நாளன்று தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் நடுவரின் உதவியுடன் விழுத்த வண்ணம் இருந்தன..ஆஸ்திரேலிய மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் மட்டும் நடுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு சொல்கின்றனர் ..அது ஏன் என்று எனக்கு புரிய வில்லை ,,விக்கெட்டுகள் விழுந்தாலும் தென் ஆப்பிரிக்கா டெஸ்டை சமன் செய்ய போராடியது ..
யாருமே எதிர் பார்க்காத ஓன்று ,,,,ஆம் தென் ஆப்பிரிக்கா அணித்தலைவர் ஸ்மித் மட்டை பிடிக்க வந்தது..ஸ்மித் உள்ளே நுழையும் போது பார்வையாளர்கள் பெரும்பாலோர் எழுந்து நின்று கை தட்டினார்கள் ,,,(பார்வையாளர்களுக்கு நன்றி ),,எப்படியாவது ஆட்டத்தை சமன் செய்து விட வேண்டும் என்று ,,அட அணி தலைவருக்கே உரிய மிகப்பெரும் பொறுப்பு ..
சபாஷ் ஸ்மித் ,,, இருந்தாலும் அவரால் தோல்வியை தடுக்க முடிய வில்லை ,,வருத்தம் தாங்க முடிய வில்லை அவருக்கு ...ஆமாங்க அணித்தலைவர் அவர் .சிறந்த தலைவரும் கூட .. ஆஸ்திரேலிய அணியோ புத்தாண்டின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ,,,,ஆனாலும் தொடரை சொந்த மண்ணில் இழந்ததே....தொடரை வென்ற தென் ஆப்பிக்க அணிக்கு நமது பாராட்டுக்கள்.....

Wednesday, January 7, 2009

குறைந்தது 6-மணி நேரம் தூக்கம் ( தண்ணி அடிப்போரே சாட்டிங் பண்ணுபவரே )

நணபர்களே
குறிப்பாக இளைஞர்கள் பெரும்பாலும் சரியாக தூங்குவது கிடையாது. சில நண்பர்களுக்கு வேலை இடத்தில் உள்ள டென்ஷன்,

கல்யாணம் ஆகி துணையை விட்டு வேலை நிமித்தமாக பிரிந்து இருப்பது ,இன்னும் சிலர் வருங்கால துணையை எண்ணி கனவு கண்டுகொண்டிருப்பது,

இன்னும் சிலர் தனக்கு பிடித்தமான நடிகையுடன் ஒரு உலகத்தை கற்பனை செய்து கொண்டிருப்பர்,,இன்னும் சிலர் இணையத்தளத்தில் நேரம் தெரியாமல் (ஏன்.. சாப்பாடு கூட வேண்டாம் அவர்களுக்கு) முகம் தெரியாத நபர்களுடன் அல்லது முன் பின் தெரியாத நபர்களுடன் சாட்டிங் செய்து நேரத்துடன் தூக்கத்தையும் தொலைத்து ,,,

இப்படி பலவாறாக கற்பனையோ அல்லது நிஜமோ செய்து உங்கள் தூக்கத்தை இழந்து,திரிந்து கொண்டிருக்கும் நணபர்களே ,,,இப்படி இருப்பவரா நீங்கள் .....ஆம் என்றால் வாருங்கள் ,,,,,இந்த கட்டுரையை படியுங்கள் ...உங்கள் உடல் நலத்தை சீராக வைத்து உங்கள் வாழ்வில் நலமுடன் வாழ இந்த கிருக்குபையனின் வாழ்த்துக்கள் ...

,


ஒரு வளர்ந்த மனிதன் குறைந்தது 6 மணிநேரமாவது (குழந்தைகள் சிறுவர்கள் 8 தொடக்கம் 10 மணிநேரமாவது) தினமும் நித்திரை செய்ய வேண்டுமாம். அதற்குக் குறைவாக நித்திரை கொள்பவர்களில் அவர்களின் நாடிகள் தடிப்படைந்து பின்னர் குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய நித்திரையின்றி வாழ்பவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் 3 இல் ஒருவருக்கு நாடி தடிப்படையும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போதிய நித்திரை செய்பவர்களில் 10 இல் ஒருவருக்கே அவதானிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு நித்திரை இன்மைக்கு மன அழுத்தமும் அதனால் சுரக்கப்படும் (cortisol) எனும் ஓமோனும் நித்திரையின் அளவைக் குறைத்து நாடிகளில் கல்சியம் படிவதை அதிகரித்து நாடியை தடிப்படையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

எதுஎப்படி இருப்பினும் இவ்வாய்வை மட்டும் வைத்துக் கொண்டு நாடிகளில், இதயத்தில் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு விளங்கம் தரமுடியாத விட்டாலும் போதிய நித்திரை என்பது குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதயத்தொழிற்பாட்டை சீராக்க உதவுகின்றன என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே வேலை வேலை என்று தூக்கத்தை தொலைக்காது இரவில் போதியளவு (குறைந்தது 6) மணித்தியாலங்கள் தூங்குவதை வழங்கப்படுத்திக் கொள்வது நன்று.

குறிப்பாக பின்னரவு வரை மது அருந்திவிட்டு பின்னர் காலையில் விழித்தெழுபவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, January 5, 2009

ராணுவத்தை மிரள வைக்கும் புலிகளின் 'பங்கர்கள்'!

கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாக அலுவலகங்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பங்கர்கள் (பதுங்கு குழிகள்) எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய இரும்புக் கோட்டைகள் போல இருப்பதைப் பார்த்து இலங்கை ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சி தற்போது ராணுவத்தின் கைக்கு வந்துள்ளது. அங்கு மனித நடமாட்டமே இப்போது இல்லை. ராணுவத்தினர் மட்டுமே உள்ளனர். தெருவில் நாய்களும், மாடுகளும்தான் திரிவதாக இலங்கை மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் பல்வேறு அலுவலக கட்டடங்களை ராணுவத்தினர் தற்போது சோதனையிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு அலுவலகத்திற்கு வெளியேயும் பங்கர்கள் காணப்படுகின்றன. இந்த பங்கர்களைப் பார்த்து ராணுவத்தினர் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், அந்த அளவுக்கு இரும்புக் கோட்டை போல படு வலுவுடனும், நவீனமாகவும் அவை காணப்படுவதே.

2ம் உலகப் போரின்போது நாஜிக்கள் இதுபோன்ற பங்கர்களைத்தான் பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை விட மிக மிக வலுவாக உள்ளதாம் புலிகளின் பங்கர்கள்.

கிளிநொச்சி முழுவதும் புலிகளின் பங்கர்கள் ஏராளமாக உள்ளன.

இந்த பங்கர்கள் தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சரமாரியான குண்டு வீச்சையும் தாங்கக் கூடிய வகையில், மிக மிக வலுவானதாக உள்ளன. உள்ளே நவீன முறையில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. பல பங்கர்களில் குளிர்சாதன வசதியும் கூட உள்ளனவாம்.

சில பங்கர்கள் வெளியில் தெரியும்படி உள்ளன. சில பங்கர்கள் முழுமையாக பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற பங்கர்களுக்குள்தான் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும், முக்கியப் பிரமுகர்களையும் விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஹிட்லர் காலத்தில்தான் பங்கர்கள் மிகப் பிரபலமாக இருந்தன. ஹிட்லரே கூட தனக்கென ரகசிய பங்கர்களை அமைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதற்கு அடுத்து தற்போது விடுதலைப் புலிகளின் பங்கர்கள்தான் மிகப் பிரபலமாகியுள்ளன

Sunday, January 4, 2009

நான் கடவுள் --பிச்சை பாத்திரம்

பாலா படைப்பு என்றாலே அதில் ஒரு பிரமிப்பு இருக்கும் ,,,,,கதையில் , கதை சொல்லப்படும் விதம் ,,,அட பாலா என்றால் பாலா என்று சொல்ல வைக்கும் ....


இந்த மனிதரின் அறிய படைப்பான நான் கடவுள் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களை ஈர்த்து கொண்டிருக்கிறது...இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை ...குறிப்பாக பிச்சை பாத்திரம் பாடல் ....அட அட ,,,,
தமிழ் சினிமா இன்னும் உயிரோடு தான் இருக்கிறது இந்த மாதிரி படைப்பாளிகள் மூலம் தான் வெளிப்படுகிறது .....நன்றி பாலா .....உன் ரசிகன் ....

இதோ நீங்களும் அந்த படலை முனு முனுங்கள் .....
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
யாம் ஒரு , பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்தத
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினைய,
கணம் கணம் தினம் எனை துடிக்க விதை
போருல்லுக்கு அலைந்திடும் போருள்ளட்ட்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பார்த்ததால் தாங்குவை
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
யாம் ஒரு , பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

Friday, January 2, 2009

ஈழத்து கதறல் தமிழினம் ....

கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது.

இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர்.

புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது.

கிளிநொச்சிக்கு முன்பாக பரந்தன் நகரை நேற்று ராணுவம் கையகப்படுத்தியது. இதன் மூலம் வன்னிப் பகுதியில் முக்கிய தளங்களை இழந்துள்ளனர் புலிகள்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சி ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதலே கிளிநொச்சியைக் குறி வைத்து ராணுவம் பல முனைகளில் தனது தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் புலிகளின் தடுப்பரண்கள், தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக இந்த முயற்சி தடைபட்டு வந்தது.

இந்த மோதலில் ராணுவத் தரப்பில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தற்போது தங்களது இலக்கை ராணுவம் ஒரு வழியாக எட்டியுள்ளது.

புலிகளின் தற்போதைய ஒரே முக்கிய தலமாக முல்லைத்தீவு மாறியுள்ளது. ஆனால் ராணுவத்தின் அடுத்த குறி முல்லைத்தீவுதான் என்பதால் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை எந்த கோணத்தில் இருக்கும் என்பது கவனிப்புக்குரியதாகியுள்ளது.


ஈழப் போர் ... ஒரு பார்வை...

1948 - சிலோன் என்ற பெயரில் இருந்த இலங்கைக்கு இங்கிலாந்திடமிருந்து விடுதலை கிடைத்தது.

1956 - சிங்களத்தை ஆட்சி மொழியாக மாற்றியது இலங்கை அரசு. சிறுபான்மை தமிழர்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதுதான் ஈழத் தமிழர்களின் முதல் உரிமைக் குரலாகும்.

1958 - தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் இனவெறித் தாக்குதலை மேற்கொண்டனர். ஏராளமான தமிழர்கள் கொல்லபப்ட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வு ஆழப்பட்டது.

1972 - சிலோன் என்ற பெயர் இலங்கை என மாற்றப்பட்டது. குடியரசு நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டது. புத்த மதம், நாட்டின் பிரதான மதமாக அறிவிக்கப்பட்டது.

1976 - வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தொடங்கினார்.

1983 - விடுதலைப் புலிகள் நடத்திய கொரில்லாத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர். இதை முதல் ஈழப் போர் என புலிகள் வர்ணித்தனர்.

1987 - போர் நிறுத்தத்திற்கு முயன்ற இந்தியா, அதை அமல்படுத்த படைகளை அனுப்பியது. அமைதி ஒப்பந்தத்திற்கு புலிகள் ஒத்துக் கொண்டாலும் கூட ஆயுதங்களைக் கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையோ மோதல் மூண்டது. 1000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

1990 - 3 ஆண்டு கால சண்டைக்குப் பின்னர் இந்தியப் படைகள் இலங்கையை விட்டு கிளம்பின. யாழ்ப்பாணத்தை கையகப்படுத்தியது புலிகள் இயக்கம். 2வது ஈழப் போர் தொடங்கியது.

1991 - விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

1993 - விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா பலியானார்.

1995 - அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு முன்வந்தார். ஆனால் கடற்படைக் கப்பலை தகர்த்தனர் புலிகள். 3வது ஈழப் போர் தொடங்கியது. ஆனால் அரசு வசம் போனது யாழ்ப்பாணம்.

1995 -2001 - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் தீவிரமடைந்தது. கொழும்பு மத்திய வங்கியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். இதில் சந்திரிகாவும் காயமடைந்தார்.

2002 - நார்வே முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

2003 - அமைதிப் பேச்சுக்களிலிருந்து விலகினர் புலிகள். போர் நிறுத்தம் செயலிழந்தது.

2004 - கிழக்கை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் புலிகள். அதே ஆண்டில் சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. தமிழர் பகுதிகளில் பேரிழப்பு.

2005 - இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமல் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். புலிகளின் கடும் எதி்ர்ப்பாளரான மகிந்தா ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

2006 - ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசுப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது.

2007 - கிழக்கில் உள்ள புலிகளின் முக்கிய நகரான வாகரையை ராணுவம் மீட்டது. ஜூலையில், கிழக்கு மாகாணம் முழுமையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

2008 - ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அரசு அறிவித்தது.

- ஆகஸ்ட் மாதம் வடக்கில் நான்கு பகுதிகளில் ராணுவம் முன்னேறியது. கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்தது.

2009 - ஜனவரி 2ம் தேதியான இன்று கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்ததுஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்து விட்டு சந்தோஷப்படுகிறது....யாருக்கு கேட்க போகிறது ஈழத்து கதறல் ......

where is the party---நண்பன் சிம்பு

நண்பர்களே எதோது யோசித்து ஒரு தலைப்பு வைத்து விட்டேன். என்னடா தலைப்பை நண்பன் சிம்பு என்று வைத்து இருக்கிறானே என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்,,,

எனக்கும் சிம்புவை பிடிக்கும் ,,அவன் செய்யும் சில (குரங்கு) சேட்டைகளை பார்த்து.சரி விசயத்திக்கு வருவோம். இன்று அலுவலகத்தில் வேலை சொல்லி கொள்ளும் படி இல்லை. அதனால் இணையத்தளத்தில் ஏதாவது படிக்கலாம் என்று கணினியை நோக்கி என் கண்கள் மேய தொடங்கின,

நான் வழக்கமாக முதலில் படிப்பது சினிமா செய்திகள் தான். வழக்கம் போல கூகிள் இணையப்பக்கத்தில் தேடினேன் ,,,என் தேடலில் நண்பன் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தின் சில தகல்வல்களும் வந்தன ....சரி என்னதான் இருக்குதுன்னு உள்ளே சென்றேன் . அங்கு நான் பார்த்த ஒரு பாடலின் வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் . அந்த பாடலை எழுதியது கூட சிம்புதானாம் (நல்ல வேளை அவன் பாட வில்லை )...என்ன பிரமிப்பு ....எனக்கு அந்த பாடலை வாசிக்க கூட தெரியவில்லை ..எனக்கு கூட ஒரு சந்தேகம் ஒரு வேலை நம்ம தமிழ் தான் பிரச்சனையான்னு.....

எனக்கு அந்த சந்தேகம் தீரும் முன் இன்று படித்த இன்னொரு சம்பவம் ,,,நண்பன் சிம்பு நடிக்க வந்து ( மன்னிக்கவும் என்ன சொல்வதென்று தெரியவில்லை ______________ நீங்களே நிரப்பி கொள்ளுங்கள் மீண்டும் மன்னிக்க உங்களுக்கு கொடுத்த சிரமத்திற்கு ) 25 வருஷம் ஆகிறதாம் ..ம்ம் இன்னும் என்ன கொடுமையெல்லாம் தமிழ் மக்களுக்கு தர போறோரோ.....சரி வாங்க நீங்களும் உங்க தமிழ் அறிவை பயன்படுத்தி படிங்க பார்போம் .....where is the party


ஹே தோளுமிய்ய
ஹே தார்மிய்ய
ஹே தோளுமிய்ய தயா
ஹே பையா ஹே பைய்யா
ஹே தயா ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா
ஹே தூம தூம பைய
ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா

என்னமா பண்ணலாம்
டிஸ்கோ ’வுக்கு போகலாம்
வோட்கா ’வ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
அல்ரேஅடி நேரம் ஆச்சு
ப்ப் ’உம் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி ?ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி? ஆ நம்ம வீட்ல பார்ட்டி

என்னமா பண்ணலாம்
டிஸ்கோ ’வுக்கு போகலாம்
வோட்கா ’வ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
அல்ரேஅடி நேரம் ஆச்சு
ப்ப் ’உம் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி ?ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி? ஆ நம்ம வீட்ல பார்ட்டி


என்னமா பண்ணலாம்
டிஸ்கோ ’வுக்கு போகலாம்
வோட்கா ’வ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
அல்ரேஅடி நேரம் ஆச்சு
ப்ப் ’உம் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி ?ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி? ஆ நம்ம வீட்ல பார்ட்டி

சடுர்டே நைட் என்னும் கிளுப்பிங் தானே
அது 11.30’க்கு மூடின போரிங் தானே
போலீஸ் ரொம்ப இப்போ ஸ்ட்ரிக்ட் ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது

ஹவுஸ் பார்ட்டி கூட இப்போ இல்லவே இல்லவ
பக்கத்துக்கு வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்ப
எங்கடு லைப் ’உ , என்ஜாய் பண்ற வயசு

வேர் இஸ் த பார்ட்டி டுநைட் ?? ஆ உங்க வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்? ஆ எங்கே வீட்ல

என்னமா பண்ணலாம்
டிஸ்கோ ’வுக்கு போகலாம்
வோட்கா ’வ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
அல்ரேஅடி நேரம் ஆச்சு
ப்ப் ’உம் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி ?ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி? ஆ நம்ம வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி டுநைட் ?? ஆ உங்க வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்? ஆ எங்கே வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்? நடு ரோட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட் ? தமிழ்நாட்டுல

ஹே தோளுமிய்ய
ஹே தார்மிய்ய
ஹே தோளுமிய்ய தயா
ஹே பையா ஹே பைய்யா
ஹே தயா ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா
ஹே தூம தூம பைய
ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா

முன்னெலாம் ஒரு பொண்ணு வேணுமுனா
நாங்க காலேஜிக்கு பஸ் ஸ்டாண்ட் ’உகும் போநோம்க
இப்பெலாம் ஒரு பொண்ணு வேன்னுமென
இந்தா கிளப் ’உகும் ப்ப்’உக்கும் வரனுமொங்கோ

வீட்ல இருந்து போகும் போது எல்லா தையும் மறைபிங்க
ப்ப்’உலா பார்த்தா எல்லா தையும் குறைபிங்க
உன்ன குத்தம் சொல்லாதே
சந்தோசத்த கொள்ளாத

வேர் இஸ் த பார்ட்டி ?ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி? ஆ நம்ம வீட்ல பார்ட்டி


வேர் இஸ் த பார்ட்டி டுநைட் ?? ஆ உங்க வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்? ஆ எங்கே வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்? நடு ரோட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட் ? தமிழ்நாட்டுல


என்னமா பண்ணலாம்
டிஸ்கோ ’வுக்கு போகலாம்
வோட்கா ’வ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
என்னமா பண்ணலாம்
டிஸ்கோ ’வுக்கு போகலாம்
வோட்கா ’வ போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
அல்ரேஅடி நேரம் ஆச்சு
ப்ப் ’உம் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்ட்டி ?ஆ உங்கே வீட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி? ஆ நம்ம வீட்ல பார்ட்டி

வேர் இஸ் த பார்ட்டி டுநைட் ?? ஆ உங்க வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்? ஆ எங்கே வீட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட்? நடு ரோட்ல
வேர் இஸ் த பார்ட்டி டுநைட் ? தமிழ்நாட்டுல

ஆ தமிழ் நாட்டுல
ஆ தமிழ் நாட்டுல
ஆ தமிழ் நாட்டுலநண்பர்களே எப்படி நம்ம தமிழ் பாட்டு...............தமிழ் வாழ்க

உணவில் கவனம் தேவை நண்பர்களே

நம்மில் சிலர் சாப்பாட்டை எதோ வேண்டா வெறுப்பாக சாப்பிடுகின்றனர் ...நண்பர்களே சாப்பாட்டை ருசித்து ரசித்து சாப்பிடுங்கள் ....


அலுவலகம், நிறுவனங்களில் பணி புரியும் பெரும்பாலானவர்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் மதிய உணவை முறைப்படி உட்கொள்ளாமல் ஒப்புக்கு ஏதோ சாப்பிடுகின்றனர்.

மதிய உணவை ஒரு பொருட்டாகவே பலர் மதிப்பதில்லை. ஆனால் அதில் போதிய கவனம் செலுத்தி, ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காற்கறி, கீரைகள், பழங்கள், தானியங்கள் நிறைந்ததாக மதிய உணவு இருக்கலாம்.

கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சேர்க்காமல், குறைந்த அளவில் சேர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது.

தினமும் ஒரே மாதிரி உணவையே சாப்பிடாமல் மாறுபட்ட, வித்தியாசமான உணவு வகைகளை மதிய நேரத்தில் சாப்பிடலாம்.அலுவலகத்தில் உணவை பகிர்ந்து சாப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதே நேரம் உணவை பிறரிடம் இருந்து எடுப்பதிலோ, கொடுப்பதிலோ சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

உணவுகளை பகிர்ந்து கொள்ளும் போது கரண்டி, ஸ்பூன்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையை பயன்படுத்துவது கூடாது.