Monday, January 26, 2009

ஆஸ்திரேலியா தொடரை இழந்தது .....வெட்கம் மானம் ,,,

இன்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது .....இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் மட்டை பிடித்தது. அவர்களின் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சிற்கு எதிராக ஒன்றும் முடிய வில்லை ,,பாவம்,, அணி தலைவர் பாண்டிங் மட்டும் சமாளித்து ஆடினார்.மற்ற வீரர்கள் அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை ,,,வெறும் 222 ஓட்டம் மட்டுமே எடுத்தது,
விடுவார்களா தென் ஆப்பிரிக்கா அணியினர் ,,,தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு ,,நன்றாக பயன் படுத்தி 40 ஓவர்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினர்....சபாஷ் தென் ஆப்பிரிக்கா .....
ஆஸ்திரேலியா தோற்றது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சந்தோசமாக தான் இருந்திருக்கும் ....ஆம் அவர்கள் தர வரிசையில் கீழ் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ,,இதுவரை ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா ,,தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ...
இந்தியாவின் ஆதிக்கம் மேல் ஓங்க தொடக்கி இருக்கிறது ..பாண்டிங்கை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது இன்றைய ஆட நேர முடிவில் ... என்ன செய்ய சொந்த மண்ணில் தொடரை இழப்பது எவ்வளவு வேதனை...ம்ம் அனுபவிக்கட்டும் ....

1 comment:

  1. // இந்தியாவின் ஆதிக்கம் மேல் ஓங்க தொடக்கி இருக்கிறது ..பாண்டிங்கை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது இன்றைய ஆட நேர முடிவில் ... என்ன செய்ய சொந்த மண்ணில் தொடரை இழப்பது எவ்வளவு வேதனை...ம்ம் அனுபவிக்கட்டும் .... //

    வாழ்க்கைங்கரது ஒரு சக்கரம்மாதிரி அதுல ஜெக்கிரவன் தோப்பன்,தோக்குரவன் ஜெய்ப்பான்.
    எதோ ஒரு படத்தோட டைலாக்.

    ReplyDelete