Friday, April 3, 2009

உங்கள் ஆதரவு கேப்டனுக்கே


உங்கள் ஆதரவு கேப்டனுக்கே:


இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளது.ஆனால் சில மாநிலங்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் பின் தங்கியும் உள்ளது.ஆனால் தமிழகம் கல்வியிலும் வறுமையிலும் பரவாயில்லை .தமிழகத்தில் பயின்று இன்று பல இளைஞர்கள் வேறு மாநிலங்களிலும் ,வெளிநாட்டிலும் திறம் பட வேலை செய்து வருகின்றனர்.இதெற்கெல்லாம் ஆணிவேர் தமிழகத்தில் கல்வி நல்ல முறையில் கற்று தரப்படுகிறது .கல்வியோடு ஒழுக்கமும் கற்று தரப்படுகிறது.இதெற்கெல்லாம் காரணம் அன்றைய உண்மையான அரசியல்வாதிகளான பேரறிஞர் அண்ணாத்துரை ,பெருந்தலைவர் காமராஜர் ,மற்றும் மக்கள் தலைவர் எம் .ஜி.ஆர் ,இவர்களால் தான் தமிழகம் ஓரளவுக்கு பரவாஇல்லை ,,ஆனால் இவர்கள் மறைவுக்குபின் இவர்கள் அரும்பாடு பட்டு உழைத்து மக்களுக்கு சேவை செய்து நடத்தி வந்த கட்சிகள் பின்னாளில் சேரக்கூடாத சிலரிடம் போயி சேர்ந்தது.


தி.மு.க : >




பேரறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க வின் இன்றைய தலைவர்
குடும்ப அரசியல் நடத்தி தமிழகத்தை ஆளும் போதெல்லாம் தமிழக மக்களை இலவசம் என்ற பெயரில் சில பொருள்களை கொடுத்து (கலர் டிவி ,அடுப்பு ,ஒரு ரூபாய் அரிசி )மக்களை தங்களுக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர் ,,ஆனாலும் ஒரு ரூபாய் அரிசி திட்டம் இருக்கிறதே அது உட்கட்சிகாரர்களுக்கு அரிசி கடத்த ஏதுவான திட்டம் ..பாவம் ஏழை மக்களுக்கு என்ன தெரியபோகிறது ,,இந்த அரசு மக்களுக்கு பிச்சை போடுகிறதா ,,மக்கள் உழைக்க தயாராக இருக்கிறார்கள் ,,அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி அந்த குடும்பத்தின் வறுமையை நிரந்தரமாக போக்க முடியாத அரசு அவர்களுக்கு இலவசம் என்ற பெயரில் எதையாவது கொடுத்து அடிமை ஆக்கி கொள்கின்றனர் ..
எழுந்து நடப்பதெற்கே நாலு பேர் கைதாங்கலாக பிடிக்க வேண்டும் இப்படி ஒரு தலைவர் ,அவருக்கு பதவிமேல் அப்படி ஒரு ஆசை..இது தான் இன்றைய தி.மு.க .

அ.தி.மு.க :




மக்கள் தலைவர் எம் .ஜி .ஆர் ஆரம்பித்த கட்சி இன்று ஒரு பெண்ணிடம் ஆனால் இங்கு குடும்ப அரசியல் இல்லை ,,ஆட்சியில் இருக்கும் போது மக்களை கண்டு கொள்வதே கிடையாது ,ஆட்சி முடியும் போது மக்களிடம் போய் வாய்க்கிழிய பேசுவது.தொண்டர்கள் இவரை அம்மா என்று தான் அழைப்பார்கள்,,எந்த விதத்தில் அம்மா ஆனார் அந்த பெண் என்று தெரியவில்லை .ஆனால் இங்கு எடுக்கப்படும் முடிவுகள் நன்மையோ ,தீமையோ தைரியமாக எடுக்கப்படும்.சொல்லிகொள்ளும்படி பெரிதாக எதுவும் ஆட்சிகாலத்தில் செய்தது கிடையாது .எம் .ஜி .ஆர் .பெயரை சொல்லி இன்றும் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் .

தே.மு.தி.க :



தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆண்டு வரும் கட்சிகள் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லை,தேர்தல் நேரத்தில் யாராவது தன்னிடம் பிச்சை கேட்டு வரமாட்டார்களா என்று எதிர் பார்த்து கொண்டிருக்கின்றன .ஆனால் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது.விஜயகாந்த் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியலுக்கு வரவில்லை .மக்களுக்கு தன்னால் முடிந்தவரையில் நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான்.மக்கள் இவரை ஆட்சி பீடத்தில் ஒருமுறை வைத்துதான் பாருங்களேன் ,,இது பாராளுமன்ற தேர்தல் தானே என்று நீங்கள் நினைக்கலாம் ,இந்த தேர்தலில் ஒரு ஐந்து அல்லது பத்து சீட் வெற்றி பெற செய்யுங்கள் .அவரால் அந்த M.P க்களை கொண்டு தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று தான் பார்ப்போமே ,,ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் நமக்கு தேவையான முதல்வர் நமது கையில் .இல்லையென்றால் அவருக்கு தகுதி இல்லை என்று ஓரம் கட்டி விடலாம் ...இல்லையென்றால் அவர் நாய்களோடும் நரிகளோடும் கூட்டணி வைத்து கொள்ள நாமே காரணம் ஆகலாம் .,ஆனால் ஒன்று ஒருவருக்கு வாய்ப்பு வழங்காமலேயே அவரால் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம்,
தே.மு.தி.க விடம் உழைப்பு உள்ளது ,நம்மிடம் ஓட்டு உள்ளது ...உழைக்க தயாராக உள்ளவரிடம் உங்கள் ஓட்டு போய் சேரட்டும். வாழ்க தமிழகம் ..வளர்க தமிழன் ...

2 comments:

  1. //தே.மு.தி.க விடம் உழைப்பு உள்ளது ,நம்மிடம் ஓட்டு உள்ளது ...உழைக்க தயாராக உள்ளவரிடம் உங்கள் ஓட்டு போய் சேரட்டும். வாழ்க தமிழகம் ..வளர்க தமிழன் ... //

    எனக்கு விஜய காந்தை பிடிக்கும், ஆனா நான் வெளிநாட்டுல ஆணி புடிங்குறதால ஓட்டு போடமுடியாதே1?

    ReplyDelete
  2. தான் கட்டிய கல்லூரிகளுக்கு பிரச்சினை வரும் என்ற நிலையில் அதுவரை சந்திக்காத ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அதுபோலவே தன் கல்யாண மண்டபம் இடிக்கப்படப் போகிறது என்று தெரிந்ததுமே கலைஞரை 'மரியாதை நிமித்தமாக' சந்தித்தார். சினிமாவில் சம்பாதித்ததை விட கல்லூரிகள் மூலமாக பன்மடங்கு விஜயகாந்த் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் நேர்மையாக கல்லூரி நடத்துவது என்பது சாத்தியமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    * திமுக, அதிமுக இருகட்சிகளுமே ஊழல்கட்சிகள். தமிழகத்தில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளுமே ஊழல்வாதிகள். புதியவர்களான எங்களை தேர்ந்தெடுங்கள் என்று உள்ளாட்சித் தேர்தலின் போது பிரச்சாரம் செய்த விஜயகாந்தின் கட்சியின் இன்றைய முக்கியஸ்தர்கள் பெரும்பாலோனோர் பண்ரூட்டி, கு.ப.கி., சி.ஆர்.பாஸ்கர் போன்று விஜயகாந்த் விமர்சித்த மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களே.

    ReplyDelete